BREAKING NEWS
5 நாட்களுக்கு இடி மின்னலுடன்‌ கூடிய கன மழை அறிவிப்பு!

5 நாட்களுக்கு இடி மின்னலுடன்‌ கூடிய கன மழை அறிவிப்பு!

296

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது‌.

தமிழ்நாட்டில்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்‌ வெப்பசலனத்தின்‌ காரணமாக இன்று காஞ்சிபுரம்‌, திருவண்ணாமலை, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, கடலூர்‌, மதுரை, தேனி, திண்டுக்கல்‌, சேலம்‌, தர்மபுரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌.

ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌ என வானிலை மையம் அறிவிப்பு.

நாளை தேனி, திண்டுக்கல்‌, சேலம்‌, மதுரை, தர்மபுரி, சிவகங்கை விருதுநகர்‌, விழுப்புரம்‌ மற்றும்‌ கள்ளக்குறிச்‌சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழை பெய்யக்கூடும்‌.

புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது‌.

நாளை மறுநாள் மேற்கு தொடர்ச்‌சி மலையை ஓட்டிய நீலகிரி, கோயம்புத்தூர்‌ தேனி, திண்டுக்கல்,‌ தென்காசி மாவட்டங்கள்‌, மதுரை, சிவகங்கை மற்றும்‌ டெல்டா மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழை பெய்யக்கூடும்‌.

புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு‌.

மேலும் 04 மற்றும் 05 ஆகிய தேதிகளில் வட மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ சில பகுஇகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

அதிக பட்ச வெப்பநிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

மேலும் அரபிக்கடல் பகுதிகளில் இன்று முதல் வருகின்ற 5-ம் தேதி வரை தென் மேற்கு மத்திய மேற்கு மற்றும் வடக்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள புதுச்சேரி நியூஸ் சேனலில் இணைந்திருங்கள்!

TO GET LATEST NEWS UPDATE IN FACEBOOK

LIKE OUR FACEBOOK PAGE @ HTTPS://WWW.FACEBOOK.COM/WWW.PUDUCHERRYNEWS.IN

TO JOIN OUR FACEBOOK GROUP CLICK HERE

வாட்ஸ்அப் குழுவில் இணைய : TO JOIN OUR WHATSAPP GROUP, CLICK THE LINK BELOW

புதுச்சேரி HTTPS://CHAT.WHATSAPP.COM/F8XBURAP1UU




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *