BREAKING NEWS

விவசாயிக்கு தேசிய விருது : அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

802

எதிர்வரும் ஆண்டு முதல்…

இவர் சிறந்த விவசாயி என்று ஒரு தேசிய விருது கொடுங்கள்

இவர் சிறந்த நெசவாளி என்று ஒரு தேசிய விருது கொடுங்கள்

இவர் சிறந்த மருத்துவர் என்று ஒரு தேசிய விருது கொடுங்கள்

இவர் சிறந்த சுகாதார பணியாளர் என்று ஒரு தேசிய விருது கொடுங்கள்

இவர் சிறந்த தூய்மை பணியாளர் என்று ஒரு தேசிய விருது கொடுங்கள்.

இதுபோல ஒவ்வொரு சமுதாயப் பணியாளர்களுக்கும் தேசிய விருதினை கொடுங்கள்…..

கடந்த காலங்களில் சுதந்திரப் போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்தது இந்த திரைத்துறை மற்றும் நாடகங்கள். மேலும் மக்களுக்கு பல நல்ல கருத்துகளை நாடகம் மற்றும் சினிமா மூலம் பரப்பினர்.

ஆனால் தற்போதைய நிலை என்ன?

குறிப்பாக தமிழகத்தில் சமுதாய சீரழிவிற்கும் ஆபாசத்திற்கு மட்டுமே சினிமா அதிக அளவில் உதவுகிறது. இது பல்வேறு குற்ற சம்பவங்களுக்கும் வழிவகுக்கிறது, மற்றபடி நல்ல கருத்துக்கள் மிக மிக குறைவே .

மேலும் தற்போது நிலவும் சூழ்நிலை, அதாவது ஒரு பேரழிவு சூழ்நிலையில் நமக்கும், நாட்டுக்கும் உறுதுணையாகவும் நாட்டை காப்பாற்றும் நிலையில் உள்ளவர்கள் யார்?

விவசாயிகள் , சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் இதர துறைகளும் நமக்கு உறுதுணையாக இருக்கின்றன. மேலும் பல துறையினரை கூறலாம் இவர்களுக்கு விருது கொடுத்து கௌரவிக்க வேண்டுமே தவிர, திரைப்படத் துறையினருக்கு அல்ல.

நாட்டுக்கு எந்த பயனும் விளைவிக்காத திரைப்படத்துறைக்கு தேசிய விருதுகளை கொடுப்பதை விட நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சமுதாயத்திற்காகவும் பாடுபடும் இவர்களுக்கு கொடுப்பது எவ்வளவோ மேலானது.

விவசாயிகள் , சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் இதர துறைகளும் தேசிய விருது கொடுத்து கௌரவிக்க வேண்டும் என்று அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *