BREAKING NEWS
வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..

107

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர் 10.5% இட ஒதுக்கீட்டை 26.02.2021 முதல் நடைமுறைப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டார்.

அதோடு, சீர் மரபினருக்கு 7%, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% உள் ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

முதல்வரை சந்தித்த பின்பு பேசிய சட்ட மன்ற உறுப்பினர் வேல்முருகன், தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கதக்கது.

திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி இருப்பது பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார்.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி மனமார்ந்த நன்றியை தெரிவித்தார் அக்கட்சியின் தலைவர் சட்ட மன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்கள்.

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கல்வி, வேலைவாய்ப்பில் நடைமுறைப்படுத்த அரசாணை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பட்டாடை அணிவித்து பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் மருத்துவர் ராமதாஸ் அவர்களும், அன்புமணி M.P அவர்களும் கைபேசியில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள புதுச்சேரி நியூஸ் சேனலில் இணைந்திருங்கள்!

TO GET LATEST NEWS UPDATE IN FACEBOOK

LIKE OUR FACEBOOK PAGE @ HTTPS://WWW.FACEBOOK.COM/WWW.PUDUCHERRYNEWS.IN

TO JOIN OUR FACEBOOK GROUP https://www.facebook.com/groups/553242838952336

வாட்ஸ்அப் குழுவில் இணைய : TO JOIN OUR WHATSAPP GROUP, CLICK THE LINK BELOW

HTTPS://CHAT.WHATSAPP.COM/F8XBURAP1UU




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *