BREAKING NEWS

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி விவசாயிகளை ஊக்கப்படுத்த புதிய திட்டங்கள்.

93

புதுச்சேரி: சுதந்திர தின விழாவை யொட்டி, சுதந்திரப் போராட்ட தியாகிகளை கவுரவிக்கும் நிகழ்ச்சி, தாவரவியல் பூங்காவில் நேற்று நடந்தது.செய்தி, விளம்பரத் துறை செயலர் உதயக்குமார் வரவேற்றார்.

அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.

செய்தி, விளம்பரத் துறை இயக்குநர் வினய ராஜ், வேளாண் துறை இயக்குநர் பாலகாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தியாகிகளுக்கு இனிப்பு வழங்கி, சால்வை அணிவித்து கவுரவித்து, முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

தியாகிகளால் தான் நாம் இன்று சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிகிறது.

தியாகிகளை கவுர விப்பதில் பெருமை அடைகிறேன்.

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக பல புதிய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவோம்.

படித்த இளைஞர்களுக்கு அரசு துறை அல்லது தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.

விவசாயம் பெருமளவு குறைந்து வருகிறது.

விவசாயிகளை ஊக்கப்படுத்த திட்டங்கள் கொண்டு வரப்படும்.

மற்றும் பாசன அமைப்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களுக்கான அறிவிப்புகள் விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக 6 ஆயிரம் பேர் முதியோர் உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

அனைவருக்கும் உதவித்தொகை வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *