BREAKING NEWS

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையின் தாயார் உடலுக்கு ஆளுநர், தமிழக முதல்வர் நேரில் அஞ்சலி .!

57

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தாயாரும் குமரி ஆனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி உடல்நலக் குறைவால் காரணமாக
நேற்று காலமானார்.

அவருக்கு வயது (76)தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் தமிழிசையின் தாயாரும், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மனைவியுமான கிருஷ்ணகுமாரி உடல்நலக் குறைவால் காலமானார்.

இதையடுத்து தெலுங்கானாவில் இருந்து தாயார் உடல் கொண்டுவரப்பட்டு சென்னையில் இன்று இறுதி சடங்கு நடக்க உள்ளது தமிழிசை தெரிவித்துள்ளார்.

அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தாயார் கிருஷ்ணகுமாரியின் உடலுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர்
ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

கிருஷ்ணகுமாரி அம்மாள் மறைவிற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை விருகம்பாக்கம் இல்லத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையின் தாயார் qகிருஷ்ணகுமாரியின் உடலுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *