BREAKING NEWS

புதுச்சேரி அரசும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம், எம்.பி.ரவிக்குமார் மேகதாது அணை விவகாரம்.

239

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் பணியை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவை கலைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு ரூபாய் ,9000 கோடி செலவில் அணை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையைக் கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் நிலையில்.

தற்போது தமிழக அரசைப்போல புதுச்சேரி அரசும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

அம்மனுவில் “புதுச்சேரி மாநிலத்தின் பிரத்யேகமான புவியியல் சூழல் இங்கு தண்ணீரைச் சேமித்து வைக்கும் நீர்த்தேக்கம் எதையும் கட்டுவதற்கு உகந்ததாக இல்லை.

இங்குள்ள நிலம் களிமண் நிலமாக இருப்பதால் நெல்லைத் தவிர வேறு பயிர் எதையும் சாகுபடி செய்ய முடியாது.

புதுச்சேரியில் சாகுபடி செய்யப்படும் மொத்த நிலப்பரப்பான 27,000 ஆயிரம் ஏக்கர் என்பது நீண்டகாலமாக நிலையானதாக மாறாமல் உள்ளது.

புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சரை சந்தித்த எம்.பி ரவிக்குமார்.

இங்குள்ள விவசாயம் பெரிதும் வடகிழக்குப் பருவமழையைத்தான் நம்பியுள்ளது.

அதுமட்டுமின்றி கடலோரப் பகுதி முழுவதும் கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் உப்பு நீராக மாறிவிட்டது.

எனவே, புதுச்சேரி மாநில விவசாயிகள் காவிரி நீரை மட்டுமே நம்பியுள்ளனர்,” என்று விளக்கியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று ஜூலை 13 – ஆம் தேதி புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து, ரவிகுமார் மனு அளித்துள்ளார்.

காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கில் புதுச்சேரிக்கு 9 டி ,எம் ,சி தண்ணீர் வேண்டுமென வாதாடிய நிலையில், நடுவர் மன்றத்தால் ஒதுக்கப்பட்ட 7 டி ,எம் ,சி தண்ணீரை உச்ச நீதிமன்றமும் ஒதுக்கியது.

நடுவர்மன்றம் புதுச்சேரியில் குறுவை மற்றும் சம்பா இணைந்த முதல்போக சாகுபடி 27,145 ஏக்கரில் நடப்பதாகவும், தாளடி என்னும் 2-ம் போக சாகுபடி 15,388 ஏக்கரில் நடப்பதாகவும் உறுதி செய்தது.

“புதுச்சேரியின் பிரத்யேகமான புவியியல் நிலையைக் கருத்தில்கொண்டு அங்குள்ள விவசாயிகள் 2 , போகம் சாகுபடி செய்வதற்கான உரிமையை உச்ச நீதிமன்றமும் தனது இறுதித் தீர்ப்பில் அங்கீகரித்துள்ளது.

அதற்காக ஒதுக்கப்பட்ட 7 டி ,எம் ,சி நீரைத் தமிழகத்தின் வழியாக நந்தலாறு, நட்டாறு, வஞ்சி ஆறு, நூலாறு, அரசலாறு, திருமலைராஜன் ஆறு, பிரவிடையான் ஆறு ஆகிய 7 ஆறுகளின் மூலம் புதுச்சேரி பெற வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

” என்று ரவிகுமார் கூறியுள்ளார் ,தற்போது காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

அந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கான தண்ணீர் கிடைக்காது.

அதனால் புதுச்சேரிக்கும் காவிரி நீர் கிடைக்காத நிலை உருவாகும்.

மேகதாதுவில் அணையைத் தடுப்பதற்காகத் தமிழக அரசு சட்டரீதியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதோடு, அரசியல் ரீதியில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரகடந்த 12-ம் தேதி அன்று சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியுள்ளது.

அதில் 3 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“புதுச்சேரி அரசும் உடனடியாக இந்தப் பிரச்சனையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இல்லாவிட்டால் காரைக்கால் பகுதியில் சாகுபடி செய்யும் நெல்பயிர்கள் முற்றிலும் விவசாயம் அழியும்நிலை ஏற்படும்.

எனவே சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும்.

” அதற்கென அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி தமிழக அரசுடன் இணைந்து புதுச்சேரியின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்டத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனு அறிக்கையில் எம்.பி. ரவிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

என்று தனது விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள புதுச்சேரி நியூஸ் சேனலில் இணைந்திருங்கள்!

TO GET LATEST NEWS UPDATE IN FACEBOOK

LIKE OUR FACEBOOK PAGE @ HTTPS://WWW.FACEBOOK.COM/WWW.PUDUCHERRYNEWS.IN

TO JOIN OUR FACEBOOK GROUP https://www.facebook.com/groups/553242838952336

வாட்ஸ்அப் குழுவில் இணைய : TO JOIN OUR WHATSAPP GROUP, CLICK THE LINK BELOW

புதுச்சேரி HTTPS://CHAT.WHATSAPP.COM/F8XBURAP1UU
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *