BREAKING NEWS

புதுச்சேரியில் பர்னிச்சர் கண்காட்சி நாளை முதல் துவங்குகிறது.

55

புதுச்சேரியில் ஐ.சி.டி.இ., நிறுவனம் சார்பில், பர்னிச்சர் கண்காட்சி மற்றும் விற்பனை மேளா, நாளை துவங்கி ஐந்து நாட்கள் வரை நடக்கின்றதுஇது குறித்து இ.சி.டி.இ., கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள.

தி பர்னிச்சர் ஷோ, விற்பனை மேளா, புதுச்சேரி ஆனந்தா இன் ஓட்டல் பின்புறம் உள்ள சாய்பாபா திருமண மண்டபத்தில் நாளை 1- ஆம் தேதி  துவங்குகிறது.

காலை 10.30 மணிக்கு, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைக்கிறார்.

வரும் 5-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கும் பர்னிச்சர் விற்பனை மேளாவில், அனைத்து விதமான பர்னிச்சர்களும் ஒரே இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன.

கட்டில்கள், மெத்தைகள், இறக்குமதி செய்யப் பட்ட சோபா வகைகள், குஷன் சோபாக்கள், டைனிங் டேபிள்கள், தொழிற்சாலைகளில் இருந்து நேரடி விற்பனையாக அடக்க விலைக்கே விற்பனை செய்யப்பட உள்ளது.

 டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்கள், சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புல்வெளியில் பயன்படுத்தும் முற்றிலும் மரங்களால் தயாரிக்கப்பட்ட ஊஞ்சல்கள், ஒரே பளிங்கு கல்லால் உருவாக்கப்பட்ட வெள்ளை குதிரை சிலை, சுவரில் பொருத்தும் கலைநயமிக்க வேலைப்பாடுகளுடன் கூடிய வரைகலை ஓவியங்கள், வேலைப்பாடுகள் மிக்க முற்றிலும் உலோகத்தால் உருவாக்கப்பட்ட புத்தர், சிவன், கிருஷ்ணன், ஆளுயர விநாயகர், சாயிபாபா உள்ளிட்ட கடவுள்களின் சிலைகள், விலங்குகள், விளக்குகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதே போல வெளிமாநிலங்களில் கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட தேக்குமர கட்டில்கள், டைனிங் டேபிள்கள், சோபாக்கள், சோபா கம்பெட் போன்ற ஏராளமான பர்னிச்சர் வகைகளும் அடக்க விலைக்கே கிடைக்கும்.

விற்பனை மேளாவை காலை 10.மணி முதல் இரவு 9.௦௦ மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள புதுச்சேரி நியூஸ் சேனலில் இணைந்திருங்கள்!

 

TO GET LATEST NEWS UPDATE IN FACEBOOK

 

 

LIKE OUR FACEBOOK PAGE @ HTTPS://WWW.FACEBOOK.COM/WWW.PUDUCHERRYNEWS.IN

 

TO JOIN OUR FACEBOOK GROUP https://www.facebook.com/groups/553242838952336

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *