BREAKING NEWS

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட், 31-ஆம் நள்ளிரவு வரை நீட்டிப்பு .

90

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு ஆக. 31-ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக புதுச்சேரி மாநில செயற்குழு உறுப்பினரும், நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை செயலருமான விக்ராந்த் ராஜா இன்று ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது .

புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது.

மேலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் உணவகங்கள் இரவு 9 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் இனி 10 மணி வரை திறக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியை பொறுத்தவரை நேற்றைக்கு மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதுவரை 1,22,282 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, 1,19,548 போ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினா்.

 
தற்போது 728 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை கொரோனா தொற்றுக்கு 1,805 போ் பலியாகினா். 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *