BREAKING NEWS

புதுச்சேரியில் சுதந்திர தின விழாவில் தங்கப் பதக்கம் அமலோற்பவம் பள்ளி மாணவிக்கு.

74

புதுச்சேரி: சுதந்திர தின விழாவில், தங்கப் பதக்கம் பெற்ற அமலோற்பவம் பள்ளி என்.சி.சி. மாணவியை, பள்ளியின் முதுநிலை முதல்வர் பாராட்டினார்.

புதுச்சேரி வாணரப்பேட்டை அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி மாணவி பிரகதி, தேசிய மாணவர் கடற்படை பிரிவில் கடந்த 2019ம் ஆண்டு இணைந்தார்.என்.சி.சி. இளையோர் மகளிர் பிரிவில் சிறந்த கேடட் ஆக செயலாற்றி வந்தார்.

இவரது அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகளை பாராட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த சுதந்திர தின விழாவில், மாணவி பிரகதிக்கு, முதல்வர் ரங்கசாமி தங்கப் பதக்கம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

விருது பெற்ற மாணவி பிரகதியை, பள்ளியின் முதுநிலை முதல்வர் லுார்துசாமி பாராட்டினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *