BREAKING NEWS

தமிழக அரசுப் பேருந்தில் வரும் பயணிகள் கடும் அவதி.

243

காரைக்கால் எல்லைப் பகுதிகளில் இறக்கிவிடுவதால் தமிழக அரசுப் பேருந்தில் வரும் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால், பொதுப் போக்குவரத்துகள் தொடங்கப்பட்டுள்ளன.

ஆனால், மாநிலங்களுக்கிடையேயான பேருந்து போக்குவரத்து முழுமையாக தொடங்கப்படவில்லை.

இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில எல்லைப் பகுதிகளையொட்டியுள்ள பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்தநிலையில் பொதுமக்கள் தற்போது புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம், தமிழகத்தின் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கிடையே அமைந்துள்ளது.

மருத்துவம் , வேலை, வியாபாரம் என பல்வேறு காரணங்களுக்காக காரைக்கால் மக்கள் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்குச் செல்வதும், அங்குள்ளோர் காரைக்கால் பகுதிகளுக்குச் செல்வதும் அன்றாடம் நிகழும் வழக்கமான ஒன்று.

புதுச்சேரி அரசுப் பேருந்துகள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்படும் நிலையில், காரைக்கால் மக்கள் வெளியூர்களுக்குச் செல்ல பெரிதும் தமிழக அரசுப் பேருந்துகளையே நம்பியுள்ளனர்.

மாநிலங்களுக் கிடையேயான பேருந்து போக்குவரத்து தொடங்கப்படாத நிலையில், நாகை, சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்டப் பகுதிகளுக்குச் செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் காரைக்கால் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.

ஆனால், காரைக்கால் மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் பயணிகளை ஏற்றி, இறக்க அதிகாரப்பூர்வமாக அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனால் தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்ட கடந்த 5-ஆம் தேதி முதல், தமிழக அரசுப் பேருந்துகளில் வரும் பயணிகள் காரைக்கால் மாவட்ட எல்லைப் பகுதிகளிலேயே இறக்கி விடப்படுகின்றனர்.

பின்னர் அங்கிருந்து புதுச்சேரி அரசுப் பேருந்துகள் மூலம் காரைக்கால் பகுதிகளுக்குச் செல்கின்றனர்.

அதேபோல, காரைக்கால் பகுதியிலிருந்து வெளியூர் செல்லக்கூடிய பயணிகள் மாவட்ட எல்லைக்கு வந்து, பின்னர் தமிழக அரசுப் பேருந்துகள் மூலம் செல்கின்றனர்.

எல்லைப் பகுதிகளில் பேருந்து பயணிகளுக்கு எவ்வித வசதியும் இல்லாததால், பேருந்துக்காக வெட்டவெளியில் நீண்டநேரம் பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதனால், அருகருகே உள்ள இரு மாநிலப் பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, தமிழக அரசுப் பேருந்துகள் காரைக்கால் மாவட்டத்துக்குள் பயணிகளை ஏற்றி, இறக்குவதற்கேற்ற வகையில் தேவையான நடவடிக்கைகளை .

புதுச்சேரி ஆட்சியாளர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களும், பயணிகளும் வலியுறுத்துகின்றனர்.

அங்கிருந்து , புதுச்சேரி செல்ல 10, கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலையில், இதனை பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் அதிக கட்டணம் வசூலித்து வருவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர் .

உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசு என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள புதுச்சேரி நியூஸ் சேனலில் இணைந்திருங்கள்!

TO GET LATEST NEWS UPDATE IN FACEBOOK

LIKE OUR FACEBOOK PAGE @ HTTPS://WWW.FACEBOOK.COM/WWW.PUDUCHERRYNEWS.IN

TO JOIN OUR FACEBOOK GROUP https://www.facebook.com/groups/553242838952336

வாட்ஸ்அப் குழுவில் இணைய : TO JOIN OUR WHATSAPP GROUP, CLICK THE LINK BELOW

புதுச்சேரி HTTPS://CHAT.WHATSAPP.COM/F8XBURAP1UU




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *