BREAKING NEWS

தமிழகம் புதுச்சேரி இடையே 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும், சமூக இடைவெளியுடன், மகிழ்ச்சியில் பயணிகள்.!

218

தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் இடையே நேற்று முதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் தற்போது 71 நாட்களுக்கு பிறகு தமிழக பகுதியில் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு அதிகமாக பேருந்துகள் இயக்கப்பட்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதேபோல் புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்து பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது .

இந்தநிலையில் தமிழக பேருந்துகளை புதுச்சேரி மாநிலம் வழியாக இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 2 மாதமாக புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கவில்லை.

இதன்காரணமாக விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் புதுச்சேரிக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் ஒரு சிலர் மட்டும் கார், இருசக்கர வாகனங்களில் சென்று வந்தனர்.

ஆனால் தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வருவதால் அரசு சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது.

அதன்படி தமிழக பேருந்துகளை புதுச்சேரி மாநிலத்திற்கு இயக்குவதற்கு அரசு அறிவிப்பு வழங்கியுள்ளது.

அந்த அறிவிப்பிற்கு புதுச்சேரி மாநில அரசும் அனுமதி கொடுத்துள்ளது.

இதனையடுத்து சுமார் நீண்ட நாட்களுக்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டது.

இதனால் விழுப்புரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதனைதொடர்ந்து புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளுக்கு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் சார்பாக 180 பேருந்துகள் இயக்கப்பட்டது.

அதன் பின் பயணிகள் தங்களது சொந்த வேலை என பல்வேறு காரணங்களுக்காக விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் பேருந்துகளில் ஏறி சென்றுள்ளனர்.

எனவே கொரோனா தொற்று பரவாத வகையில் பயணிகள் முககவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் வந்துள்ளனர் .

இவ்வாறு 2 மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுச்சேரி தமிழகத்திற்கிடையே பேருந்து போக்குவரத்திற்கு அனுமதிக்க தமிழக போக்குவரத்துத் துறைக்கு புதுச்சேரி அரசு கடிதம் எழுதியுள்ளது.

தமிழக அரசு அனுமதித்தால் ஒப்பந்தப்படி புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு 150 பேருந்துகளும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு 600 பேருந்துகளும் இயங்கும் என போக்குவரத்து துறைதகவல் தெரிவித்துள்ளது .

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள புதுச்சேரி நியூஸ் சேனலில் இணைந்திருங்கள்!

TO GET LATEST NEWS UPDATE IN FACEBOOK

LIKE OUR FACEBOOK PAGE @ HTTPS://WWW.FACEBOOK.COM/WWW.PUDUCHERRYNEWS.IN

TO JOIN OUR FACEBOOK GROUP https://www.facebook.com/groups/553242838952336

வாட்ஸ்அப் குழுவில் இணைய : TO JOIN OUR WHATSAPP GROUP, CLICK THE LINK BELOW

புதுச்சேரி HTTPS://CHAT.WHATSAPP.COM/F8XBURAP1UU




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *