BREAKING NEWS
செல்போனில் அதிகமாக விளையாடிய தங்கையை 10 இடத்திற்கு மேல் வெட்டி கொலை செய்த அண்ணன் .

செல்போனில் அதிகமாக விளையாடிய தங்கையை 10 இடத்திற்கு மேல் வெட்டி கொலை செய்த அண்ணன் .

359

த்துக்குடி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு பகுதியில் வசவப்பபுரம் என்னும் கிராமத்தில் பசும்பொன் நகரை சேர்ந்தவர் சுடலை. இவருக்கு மனைவியும் மாலை ராஜா (20) என்ற மகனும் கவிதா (17) என்ற மகளும் உள்ளனர்.

சுடலை அதே பகுதியில் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். சுடலையின் மகள் கவிதா பிளஸ் டூ படித்து வருகிறார்.

இந்தநிலையில் கவிதா தனது செல்போன் மூலம் விடிய விடிய கேம் விளையாடுவது, பேஸ்புக், வாட்ஸ் அப்பில் என அதிக நேரம் செலவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கவிதா மற்ற பணிகளில் ஈடுபடுவதை தவிர்த்து வந்துள்ளார் இதனை அவரது அண்ணன் மாலைராஜா பலமுறை கண்டித்துள்ளார்.பல தடவை கண்டித்தும் கவிதா செல்போனில் விளையாடுவதை நிறுத்தவில்லை.

இந்நிலையில் மாலை 4.30 மணி அளவில் கவிதா செல்போனில் விளையாடிக் கொண்டிருந்ததினை பார்த்த அவரது அண்ணன் மலைராஜா சத்தம் போட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாலைராஜா வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக தங்கை கவிதாவை வெட்டியுள்ளார்.

இதில் தனது தங்கையின் உடலில் 10க்கும் மேற்பட்ட இடத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் கவிதா துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

பின்னர் அங்கிருந்து மாலைராஜா தப்பி ஓடிவிட்டார் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயகுமார் டிஎஸ்பி பொன்னரசு ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே தப்பியோடிய மாலை ராஜாவை வல்லநாடு காட்டுப்பகுதியில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் தன் தங்கைசெல்போனில் அதிக நேரத்தில் செலவிடுவதால் அண்ணனே கொலை படுகொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள புதுச்சேரி நியூஸ் சேனலில் இணைந்திருங்கள்!

TO GET LATEST NEWS UPDATE IN FACEBOOK

LIKE OUR FACEBOOK PAGE @ HTTPS://WWW.FACEBOOK.COM/WWW.PUDUCHERRYNEWS.IN

TO JOIN OUR FACEBOOK GROUP CLICK HERE

வாட்ஸ்அப் குழுவில் இணைய : TO JOIN OUR WHATSAPP GROUP, CLICK THE LINK BELOW

புதுச்சேரி HTTPS://CHAT.WHATSAPP.COM/F8XBURAP1UU




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *