BREAKING NEWS
சுடுகாடா?.. இல்லை குப்பைக் காடா?? சடலங்களை அப்புறப்படுத்த முடியாமல் திணறும் ஊழியர்கள்..

சுடுகாடா?.. இல்லை குப்பைக் காடா?? சடலங்களை அப்புறப்படுத்த முடியாமல் திணறும் ஊழியர்கள்..

114

சென்னை மதுரவாயல் தொகுதிக்கு உட்பட்ட அடையாளம்பட்டு ஊராட்சி பகுதியிலுள்ள சுடுகாட்டை ஆக்கிரமிப்பு செய்து அங்கு டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது.

இந்த சுடுகாடு பகுதிக்குவரும் சிலர் தங்களை ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் என அறிமுகப்படுத்தி, பேட்டரி வாகனம் மற்றும் டிராக்டர் மூலமாக டன் கணக்கில் குப்பைகளை கொண்டு வந்து தினந்தோறும் கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

இதனால் அங்கு சடலங்களை எரிக்கமுடியாமலும், புதைக்க இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

குப்பைகள் அதிகமாக குவிவதால் நோய் பரவும் அபாயமும் இருப்பதால், அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்தப் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளே இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

துறைசார்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் அப்பகுதி எம்.எல்.ஏ ஆகியோர் இவ்விவகாரத்தில் தலையிட்டு, ஆக்கிரமிப்பு செய்து கொட்டப்படும் குப்பைகளை அகற்றி சுடுகாட்டை மீட்டுத்தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள புதுச்சேரி நியூஸ் சேனலில் இணைந்திருங்கள்!

TO GET LATEST NEWS UPDATE IN FACEBOOK

LIKE OUR FACEBOOK PAGE @ HTTPS://WWW.FACEBOOK.COM/WWW.PUDUCHERRYNEWS.IN

TO JOIN OUR FACEBOOK GROUP https://www.facebook.com/groups/553242838952336

வாட்ஸ்அப் குழுவில் இணைய : TO JOIN OUR WHATSAPP GROUP, CLICK THE LINK BELOW HTTPS://CHAT.WHATSAPP.COM/F8XBURAP1UU




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *